Connect with us

News

கவனத்தை ஈர்க்கும் ‘ஆகஸ்ட் 16, 1947’ மோஷன் போஸ்டர்.! நாளை ட்ரெய்லர் வெளியீடு…

நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ஆகஸ்ட் 16, 1947’  படத்தை என்.எஸ்.பொன்குமாரால் எழுதி இயக்கியுள்ளார். கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக அறிமுக நடிகை ரேவதி ஷர்மா நடிக்கிறார். இப்படத்தை ஏஆர் முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நரசிராம் சௌத்ரி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Motion Poster of 1947AUGUST16

Motion Poster of 1947AUGUST16 [Image Source: Twitter]

தற்போது, தயாரிப்பாளர்கள் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் தவிர, குக் வித் கோமாளி புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன் மற்றும் ஜேசன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், அதில் நாளை ட்ரைலர் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்களேன் – திருமணம் மட்டும் செய்திருக்கவே கூடாது…கடும் வருத்தத்தில் நடிகை சமந்தா.!

ஆகஸ்ட் 16, 1947 திரைப்படம், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற ஒரு நாளைக் குறிக்கும் வகையில், படம் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு மனிதன் பிரிட்டிஷ் படைகளுடன் சண்டையிடும் கதையை எடுத்துகிறது. ஆகஸ்ட் 16, 1947 ஏப்ரல் 7 அன்று திரையரங்குகளில் வரத் தயாராக உள்ளது. இதற்கிடையில், கௌதம் கார்த்தி நடிப்பில் உணவாகியுள்ள அவரது அடுத்த படமான ‘பத்து தல’ திரைப்படம் மார்ச் 30 அன்று வெளியாகிறது.

Continue Reading
To Top