வசூலில் தொடர் சரிவை சந்தித்த அவதார் 2.! அடுத்த பாகம் வெளியகுமா?
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிசம்பர் 16 அன்று வெளியாகி, இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலேயே ரூ.40.50 கோடி சம்பாதித்தது அவதார் 2 திரைப்படம். மேலும், இது இந்திய பாக்ஸ் ஆபிஸில், அதிக வசூல் செய்த ஹாலிவுட் படங்களின் வரிசையில், இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
அதில், முதல் படமாக 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் முதல் நாள் வசூலாக ரூ.53.10 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவதார் 2 படம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதற்கிடையில், இந்த படத்தின் இயக்குனர், இந்த இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்ததால் மட்டுமே அடுத்த பாகத்தை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். வரும் நாட்களில் என்ன நிலவரம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஆனால், இந்த தொடர் சரிவுக்கு கரணம், வார நாட்கள் என்பதால், இப்படி தான் இருக்கும் என்று சொன்னாலும், இந்த வார இறுதியில் வசூல் அதிகரிக்கும் என்று கண்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அவதார் 2 திரைப்படம் வர இறுதியில் ரூ.200 கோடி வசூலை எட்டும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்களேன் – லவ் டுடே பிரதீப்பிற்கு அடித்த ஜாக்பாட்.! அடுத்தாக யாரை வைத்து படம் இயக்குகிறார் தெரியுமா..?
இந்நிலையில், உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அட ஆமாங்க… அவதார் 2 உலகம் முழுவதும் ரூ.3,600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், உலகம் முழுவதும் சுமார், 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல், படம் வெளியான முதல் நாளிலேயே 1500 கோடி வசூலித்து என்பது குறிப்பிடத்தக்கது.
