Connect with us

News

Blooody Earthquake: காஷ்மீரில் நிலநடுக்கம்… ‘லியோ’ படப்பிடிப்பின் நிலவரம் என்ன?

நேற்று இரவு 11 மணியளவில் காஷ்மீரில் 6.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது, இது அம்மாநில மக்களிடையே அதிக பீதியை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கம் டெல்லி-என்சிஆர் பகுதி வரை 45 வினாடிகள் முதல் ஒன்றரை நிமிடங்கள் வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எங்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கு முகாமிட்டிருக்கும் படக்குழுவினரும் நடுக்கத்தை அனுபவித்ததாகவும், முதலில் பலத்த காற்று என்று நினைத்ததாகவும், பின்னர்தான் நிலநடுக்கம் என்பதை உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்களேன் – தங்க புடவையில் தகதகவென மின்னும் ஐஸ்வர்யா மேனன்.!

Sanjay Dutt arrives LEO SET

Sanjay Dutt arrives LEO SET [Image Source: Twitter]

அந்த வகையில், படத்தின் எழுத்தாளர் ரத்னகுமார் ட்விட்டரில் “Bloody Earthquake” என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோல், படத்தின் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், ‘சந்திரமுகி’க்கு பயந்து வடிவேலுவைக் கொண்ட ஒரு மீம் வீடியோவுடன் குழு பாதுகாப்பாக இருப்பதாக ரசிகர்களுக்கு உறுதியளித்தது.

Continue Reading
To Top