News
Body Shaming பண்றது உங்களுக்கு காமெடி-ஆ? கொந்தளித்த பசுபதி.!
விருமாண்டி, வெயில், சார்பட்டா பரம்பரை, மஜா, அசுரன், அரவான், ஆகிய திரைப்படங்களில் மிரட்டிய நடிகர் பசுபதி தற்போது தண்டாட்டி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து, வெங்கடேஷா இணைந்து தயாரித்து, ராம் சங்கையா இயக்கியுள்ளார். இப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் கதையின் நாயகன் பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் ஒரு கிராமப்புறத்தில் நடக்கும் கதை, படத்தில் கான்ஸ்டபிளாக நடிக்கிறார் நடிகர் பசுபதி. எல்லா நடிகர்கள் போல் இல்லாமல், தனக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதையில் மட்டும் நடித்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தை ப்ரோமஷன் செய்து வந்த நடிகர் பசுபதி, வாழ்க்கையில் காத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி பேசினார்.
அப்போது, Body Shaming பற்றி கொந்தளித்து பேசினார். நேர்காணலின் தொகுப்பாளர், ஒருவரது உணர்வகளை பற்றி பேசுவது இப்போதெல்லாம் காமெடியாக ரசிக்கப்படுகிறது என்று கேட்க… அதற்கு பதிலளித்த பசுபதி, அடுத்தவங்கள அசிங்கப்படுத்தி பேசுவது காமெடி கிடையாது.
ஒருத்தங்கள கிண்டல் பண்ணி பேசுறது காமெடியா உங்களுக்கு… அது வந்து ஊனம் ஒரு ஊனத்தை அசிங்க படுத்துற மாதிரி தான். காமெடி என்பது யாரையும் புண்படுத்தாமல் பேசுவது தான் காமெடி… ஒருத்தவங்கள அசிங்கப்படுத்தி பேசுவது காமெடி கிடையாது என்று கொந்தளித்து பேசினார். தண்டட்டி
