Gossips
கோடை விடுமுறையில் சியான் விக்ரமின் புதுப்படம்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…
சியான் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தை மீண்டும் தூசி தட்டட்பட்டு, படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உள்ளது. நீண்ட காலமாக தள்ளிப்போன இப்படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், மே 19ம் தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, முன்னதாக இப்படத்தினை செப்டெம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டனர். ஆனால், இறுதியாக மே மாதத்தை குறி வைத்துள்ளதாகசொல்லப்டுகிறது. அநேகமாக விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.
துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், ரிது வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் இப்படத்தை பி மதன், வெங்கட் சோமசுந்தரம் மற்றும் ரேஷ்மா கட்டாலா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இதையும் படிங்களேன் – படுக்கை அறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா.!
இந்த ஆண்டு விக்ரம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்திற்குப் பிறகு, இது அவருக்கு இரண்டாவது ரிலீஸாக அமையும். பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28 அன்று திரைக்கு வரவுள்ளது. இது போக, பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது நாடித்து வரும் ‘தங்கலான்’ திரைப்படமும் இந்த ஆண்டும் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
