13.7 C
London
Monday, July 15, 2024

தக் லைஃப்’ படப்பிடிப்பில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் காலில் எலும்பு முறிவு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்டன்ட் காட்சி ஒன்றில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் கொச்சியில் ஓய்வு எடுத்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் த்ரிஷா, சிம்பு, அபிராமி, அசோக் செல்வன், அலிஃபஸல், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ரவி.கே.சந்திரன் செய்கிறார்.

புதுச்சேரியில் நடந்த படப்பிடிப்பின் போது, கமல்ஹாசன், நாசர், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் ஹெலிகாப்டரிலிருந்து குதிக்க வேண்டிய காட்சியில், ஜோஜூ ஜார்ஜ் துரதிர்ஷ்டவசமாக இடறிவிழுந்து இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், 2 வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, கொச்சி சென்ற ஜோஜூ ஜார்ஜ், தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். சமூக வலைதளங்களில், ஜோஜூ ஜார்ஜ் கையில் ஸ்டிக் வைத்து நடக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here