என்ன வச்சி செய்யுறதுக்கு உடனே வந்துருவாங்க… நெட்டிசன்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் நக்கல் பதில்.!
சினிமாவில் இருக்கும் திருமணமாகாத நடிகைகள் ஏதேனும் விழாக்கள் அல்லது ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தால் கூட அவர்களிடம் கேட்கும் கேள்வி உங்களுக்கு எப்போது திருமணம்..? என்ற கேள்விதான். அதுமட்டுமின்றி ஒரு சில நடிகைகள் அடிக்கடி திருமண வதந்திகளையும் சந்திப்பது உண்டு. அப்படி பலமுறை சிக்கியவர் கீர்த்தி சுரேஷ்.

KeerthySuresh [Image Source : Twitter /@TheRoute ]
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல்கள் பரவியது. பிறகு அது பொய்யான தகவல் எனவும், தனக்கு திருமணம் நடந்தால் அனைவர்க்கும் அதிகாரப்பூர்வாக அறிவிப்பேன் எனவும் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

KeerthySuresh [Image Source : Twitter /@VKSThalapathy ]
இதற்கிடையில், மாமன்னன் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷிடம் தொகுப்பாளர் ” உங்களுடைய திருமணம் குறித்த வதந்திகள் குறித்த செய்திகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் பரவுகிறது அது குறித்து உங்கள் கருத்து என்ன..? என்ற கேள்வியை கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் “பொதுவாகவே சோஷியல் மீடியாவில் என்னை வைத்து செய்வதற்கு ரொம்ப பிடிக்கும்.

KeerthySuresh [Image Source : Twitter /@OnlyHeroines ]
அதனால் என்னை பற்றி இல்லாத பொல்லாத வதந்திகளை பரப்பிவிடுவார்கள். ஆனால், அவர்கள் சொல்வதைப் பற்றி எனக்கு எனக்கு தோணுவது எல்லாம் ஒண்ணுதான். என்னுடைய திருமணத்திற்கு அவர்கள் எதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். என்னை பற்றி அவர்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்பது தான் சத்தியமாக தெரியவில்லை. அவர்கள் பேசியதை வைத்து கவலைப்பட்டால் ஒன்னும் பண்ண முடியாது. எனவே சில சமயங்களில் அவருடன் திருமணம் இவருடன் திருமணம் என கிளப்பிவிடுவார்கள்.

KeerthySuresh CUTE smile [Image Source : Twitter /@sharathvjks ]
அது சில சமயம் காமெடியாக இருக்கும் சில சமயம் கோபத்தை ஏற்படுத்தும். ஆனால், அவர்களை தடுக்க முடியாது. பேசுபவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என அதிரடியாக பேசி உள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் உதயநிதிஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
