Connect with us

Movies

கனெக்ட் ட்விட்டர் விமர்சனம்: ஹாரர் த்ரில்லரில் ரசிகர்களை கவர்ந்தாரா நயன்தாரா?

கனெக்ட் ட்விட்டர் விமர்சனம்: ஹாரர் த்ரில்லரில் ரசிகர்களை கவர்ந்தாரா நயன்தாரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான ஹாரர் த்ரில்லர் படமான ‘கனெக்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா தற்போது ஜவான், கனெக்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில், லேடி சூப்பர் ஸ்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியிருக்கும் கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னையில், இப்படம் சிறப்பு காலை காட்சிகளுடன் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்னர்.

Connect Movie Nayanthara

Connect Movie Nayanthara [Image Source: Twitter]

கனெக்ட்

அஸ்வின் சரவணன் எழுதி இயக்கிய ‘கனெக்ட்’ படத்தில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிசா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை, நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனால் அவரது ஹோம் பேனரான ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

Connect Movie Nayanthara

Connect Movie Nayanthara [Image Source: Twitter]

நடிகை நயன்தாரா ஒரு ஹாரர் ஜானரில் படத்தை வழங்கி சில நாட்களாகிவிட்டதால், முதல் நாளே படத்தை பார்க்க, ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக குவிந்து வருகிறார்கள். மேலும்,  பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்களேன் – இந்தியா சார்பில் இரண்டு.! ஆஸ்கார் விருதுக்கான இறுதிப்பட்டியலில் நாட்டு கூத்து & குஜராத்தி மொழி படம்.!

Connect Movie

Connect Movie [Image Source: Google]

இந்நிலையில், ட்விட்டர் விமர்சனங்களை வைத்து பார்த்தால் படம் கலவையான வரவேற்பை பெற்று வருவது போல் தெரிகிறது.

 

ட்விட்டர் விமர்சனம்

இந்த படத்தில், நயன்தாராவை தவிர சத்யராஜ் மற்றும் பிற நடிகர்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். ட்விட்டர் விமர்சனங்கள் படி, படத்தில் பிரித்வி சந்திரசேகர் இசை சிறந்ததாக மாறியுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் திகிலூட்டும் இசையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இருப்பினும், ஒரு வலுவான கதையை வழங்குவதில் இயக்குனர் தவறவிட்டார் போல் கருத்துக்கள் எழுந்துள்ளது.

Connect Movie Nayanthara

Connect Movie Nayanthara [Image Source: Twitter]

கனெக்ட் படம் திகிலை விரும்பும் ரசிகர்களுக்கு ரசிக்கக்கூடிய படமாக இருக்கும். ஆனால், இயக்குனர் அஸ்வின் சரவணன் தனது முந்தைய ஹாரர் த்ரில்லர் திரைப்படங்களான, ‘மாயா’ மற்றும் ‘கேம் ஓவர்’ போன்ற ஒரு ஈர்க்கக்கூடிய படத்தை வழங்கத் தவறிவிட்டார் என்பது போல் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சிலர் படம் ஹாலிவுட் லெவலில் இருப்பதாகவும் படத்தில் நயன்தாரா நடிப்பு குறித்தும் பாராட்டியுள்ளனர்.

படத்தை வெளியிட மறுப்பு

படத்தின் சுவாரஸ்யத்திற்காக, இந்த கனெக்ட் படத்தை கிட்டத்தட்ட 99 நிமிடங்கள் இடைவேளை இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனால், கனெக்ட் திரைப்படத்தை இடைவேளை இன்றி வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். அதாவது, இடைவெளியி இருந்தால் தானே, பார்வையாளர்கள் ஸ்நாக்ஸ் போன்ற பொருட்களை வாங்குவார்கள்.

Connect SPECIAL PREMIERE [Image Source: Twitter]

ஆனால், அதுவும் இல்லை என்றால் லாபத்தை எப்படி பெறுவது, இது தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை கொடுக்கும் என்பதால், படத்தில் இடைவேளை வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். உடனே, இது குறித்து படக்குழு பேச்சுவார்த்தைகளை நடத்தி இடைவெளியுடன் படத்தை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top