Connect with us
movie review maamannan

Movies

அழுகை வருது…’மாமன்னன்’ படத்தை பார்த்து கலங்கும் ரசிகர்கள்…ட்விட்டர் விமர்சனம் இதோ..!!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத்பாசில் , கீர்த்தி சுரேஷ், ஆகியோர் நடிப்பில் பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Maamannan

Maamannan [Image Source : Twitter /@itz_don_]

இந்நிலையில் படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து,படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன் ஒருவர் ”  வடிவேலு படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷிற்கு படத்தில் ஸ்கோப் குறைவு அருமையான பாடல்கள், வசனங்கள். நல்ல மேக்கிங். மொத்தத்தில் படம் சுமாராக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” மாமன்னன் திரைப்படம் அருமையாக இருக்கிறது. வடிவேலு கதாபாத்திரம் அருமையாக இருக்கிறது.உதயநிதியின் கதாபாத்திரம் இடைவெளியில் படங்களின் முழு மனநிலையையும் கடுமையான முறைக்கு உயர்த்துகிறது. மாரி செல்வராஜ் படத்தை அருமையாக இயக்கியுள்ளார். பின்னணி இசையை ஏ.ஆர்.ரஹ்மான் சூப்பராக கொடுத்திருக்கிறார்.

மற்றோருவர் ” மாமன்னன் ஒருமுறை பார்க்கக்கூடிய நல்ல செய்தியுடன் கூடிய படம் 4/5 ரேட்டிங் என கொடுத்துள்ளார்.

மற்றோருவர் ” மாமன்னன் அற்புதமான இடைவெளி காட்சியுடன் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எழுச்சியின் வழக்கமான கதை அல்ல, ஆனால் மனநிலையை உருவாக்குவதை வலுவாக நம்பியிருக்கும் படம் சற்று தாமதமாக ஓடுகிறது. ஆனாலும் காட்சிகள் அனைத்தும் அருமையாக இருந்தது” என கூறியுள்ளார்.

மற்றோருவர் படத்தை பார்த்துவிட்டு ” சிலிர்க்க வைக்கும் இசை, வலுவான நடிப்பு, சிறப்பான கதை & வசனங்கள். மொத்தத்தில் அருமையான படம்” என கூறியுள்ளார்.

Continue Reading
To Top