News
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் பட்டியலில் தீபிகா படுகோன்.!
ஆஸ்கர் 2023: விருதுகள் வழங்கும் பட்டியலில் தீபிகா படுகோன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவுக்கு இது ஒரு பெருமையான தருணம்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு ஆஸ்கர் நிர்வாகம் கவுரவம் அளித்துள்ளது. அதாவது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மார்ச் 12ம் தேதி நடைப்பெறவுள்ள 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் அந்த விருதுகள் வழங்குவோர் பட்டியலில் தீபிகா படுகோன் பெயர் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து நேற்று இரவு தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராமில், ஆஸ்கர் வழங்கும் நபர்களின் பெயர்கள் இடம்பெறும் அறிக்கையை பகிர்ந்து கொண்டு, விருது வழங்கும் பட்டியலில் தான் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்தப் பட்டியலில், டுவைன் ஜான்சன், தீபிகா படுகோன், மைக்கேல் பி ஜோர்டான், ரிஸ் அகமது, எமிலி பிளண்ட், க்ளென் க்ளோஸ், ட்ராய் கோட்சுர், டுவைன் ஜான்சன், ஜெனிஃபர் கான்னெல்லி, சாமுவேல் எல். ஜாக்சன், மெலிசா மெக்கார்த்தி, ஜோ சல்டானா, டோனி யென், ஜொனாதன் மேஜர்ஸ் மற்றும் குவெஸ்ட்லோவ் ஆகியோர் உள்ளனர்.
இதையும்படிங்களேன் – குட்டை பாவாடையில் குதூகலமாக இருக்கும் ஸ்ரேயா சரண்.! வைரல் புகைப்படம்
தற்போது, நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள், தீபிகாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இதற்கிடையில், கோல்டன் குலோப் விருதை வென்ற ‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல், ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அசல் பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விருது வழங்கும் விழாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி, எம்.எம்.கீரவாணி, ராம் சரண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும், இந்த விழா மேடையில், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட “நாட்டு நாட்டு” பாடலை நேரலையில் ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால பைரவா பாடவுள்ளனர்.
