Connect with us

Movies

தாம் தூம் பிளாக்பஸ்டர்…’3 நாளில் 70 கோடி’… வசூலில் செம மாஸ் காட்டும் ‘தசரா’.!

நடிகர் நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வெளியான பான்-இந்திய திரைப்படமான “தசரா”. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.   இந்த திரைப்படம் கடந்த மார்ச் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், பலத்த எதிர்பார்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பது கிடைத்து வருகிறது என்றே கூறலாம்.

Dasara

Dasara [Image Source : Twitter]

மேலும் முன்னதாக  தசரா திரைப்படம் வெளியான 3 நாளில் உலகம் முழுவதும்  ரூ. 78  கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது, படம் 4 -நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


அதன்படி, படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 87-கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் சாய் குமார், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி, ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top