Connect with us
Sherin about dhanush

Gossips

அந்த சீன்லாம் நடிக்கும்போது எனக்கும் தனுஷுக்கும் ரொம்ப பயம்…ரகசியம் சொல்லும் ஷெரின் பேபி.!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2002-ஆம்  ஆண்டு வெளியான திரைப்படம் துள்ளுவதோ இளமை.  இந்த திரைப்படம் தான் தனுஷிற்கு, ஷெரினிற்கும் முதல் திரைப்படமும் கூட. இந்த திரைப்படம் அப்போது வெளியான காலகட்டத்தில் இளைஞர்களால் கொண்டாடப்பட்டது. விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Thulluvadho Ilamai

Thulluvadho Ilamai [Image Source : amazon.com]

படத்தில் ஷெரின் மிகவும் அழகாக இருந்திருப்பார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய ஷெரின் ” துள்ளுவதோ இளமை திரைப்படம் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு திரைப்படம்.

sherin about Thulluvadho Ilamai

sherin about Thulluvadho Ilamai [Image Source : File Image ]

இந்த திரைப்படம் தான் எனக்கு முதல் திரைப்படம். தனுஷுடன் நடித்தது, செல்வராகவன் சாருடன் பணிபுரிந்து சந்தோசம். படத்தில் வரும் நிறைய காட்சிகளில் நடிப்பதற்கு எனக்கும் மிகவும் பயமாக இருந்தது. சில ரோமன்ஸ் கட்சிகளில் நடிக்கும் போது எனக்கும் தனுஷிற்கு மிகவும் பயமாக இருந்தது.  அந்த பயம் எதற்காக வந்தது என்றால் எனக்கும் தனுஷிற்கு எனக்கும் துள்ளுவதோ இளமை திரைப்படம் தான் முதல் திரைப்படம். அது நடிக்கவந்த ஆரம்ப காலகட்டம் என்பதால் மிகவும் பயமாக இருந்தது.

SherinShringar

SherinShringar [Image Source : Twitter / @rameshlaus]

பிறகு தனுஷ் நடிப்பை பற்றி இப்போது சொல்லியே தெரியவேண்டாம். அப்போது இருந்ததற்கு தனுஷ் இப்போது எங்கேயோ போய்விட்டார். அவருடன் ஒரு படத்தில் நடித்தது எனக்கு பெருமை தான்” என கூறியுள்ளார்.  மேலும் செல்வராகவனை பற்றி பேசிய ஷெரின்  ” செல்வராகவன் ஒரு வித்தியாசமான இயக்குனர் அவருடன் பணியாற்ற முதலில் சிறிது பயமாக தான் இருந்தது. ஆனால் போக போக பழகிவிட்டது.

Sherin

Sherin [Image Source : Twitter / @cineulagam]

முதல் நாள் ஷூட்டிங்கிளே எனக்கு பெரிய வசனம் கொடுத்தார்கள். அப்போது எனக்கு தமிழ் வேற சரியாக பேச வராது.  ஒரு காட்சியில் தனுஷிற்கு போன் செய்து நான் பேச வேண்டும் அந்த காட்சியை நான் கோபமாக பேசவில்லை. ஆனால் அந்த காட்சியில் கோபமாக பேச வேண்டும், நான் கோபமாக பேசவில்லை என்பதால் செல்வராகவன் சற்று கோபம் ஆனார். அதிலிருந்து எனக்கு செல்வராகவன் மீது சற்று பயம் இருந்தது அது போக போக சரியாகி விட்டது” என கூறியுள்ளார்.

Continue Reading
To Top