News
விதிகளை மீறியதால் சட்ட சிக்கலை சந்திக்கும் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படக்குழு.!
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பீரியட் ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷின் இசையில் இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் திரைக்கு வர உள்ளது.
தற்போது, கேப்டன் மில்லர் படக்குழு ஒரு சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது என்று கிசுகிசுக்கப்படுகிறது. இப்படத்தின் பெரும்பகுதி தென்காசி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்பொது, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படக்குழுவினர் மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். படக்குழுவினரின் நடவடிக்கையால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காடுகளின் இரவு படப்பிடிப்பின் போது விளக்குகளைப் இடையூறு செய்ததால் கேப்டன் மில்லர் தயாரிப்பாளர்கள் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
இதையும் படிங்களேன் – நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட்.! நீதிமன்றம் அதிரடி…
மேலும், 15 நீர்த்தேக்க தொட்டிகள் கொண்ட செங்குளம் வாய்க்கால் கரையை சேதப்படுத்தியதாகவும், சேதமடைந்த பகுதியை மண்ணால் நிரப்பியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
