‘நா ரெடி’ பாடலில் Twist இருக்கு…நீங்க இதை கவனித்தீர்களா? பாடலில் ஒளிந்திருக்கும் பல சுவாரசியம்..!
நடிகர் விஜய் தற்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ நேற்று தேதி வெளியாகி இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை விஜய் பாடியுள்ளார் மற்றும் ராப் போர்ஷன்களை அசால் கோலார் பாடியுள்ளார். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இந்த பாடல் விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. மேலும், பாடலில் ஒளிந்திருக்கும் சில விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
நா ரெடி பாடலில் 2000 பேர்:
இந்த பாடலுக்கு சுமார் 2000 பேர் விஜய்யுடன் நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, மற்ற கல்லூரிகளிலிருந்து ஆட்கள் எடுப்பதாக முடிவு செய்த நிலையில், அது முடியவில்லை என்பதால் சென்னை கல்லூரிகள் நல்ல நடனம் ஆட கூடிய டான்சர்ஸ் மற்றும் டான்ஸ் அகாடமி உள்ள டான்ஸர்ஸ் வரவழைக்கப்பட்டு இந்த நா ரெடி பாடல் உருவகியுள்ளது.
16 Hrs 15 M Views ???????? Mental Masss Strike !#LeoFilm #NaaReady #LeoFirstSinglepic.twitter.com/8KR8gk4S4I https://t.co/XL9iL9QV8B
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) June 23, 2023
விஜய்க்கு அப்பாவாக சஞ்சய் தத்?
குறிப்பாக பார்க்க வேண்டுமென்றால், இந்த பாடலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இடம்பெற்றுள்ளார்.
இவர் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம் என்றால், விஜய்யுடன் இந்த பாடலில் இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால், பாடலில் அவர்கள் இருவரும் இருப்பதும், கட்டி பிடிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில், சஞ்சய் தத் விஜய்க்கு அப்பவாக நடித்திருக்க வாய்ப்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன்படி, சஞ்சய் தத் அணிந்திருக்கும் கத்தி சிம்பிள் கொண்ட சிலுவை டாலர் உடன் செயினை இருவரும் அணிந்துள்ளனர். ஒருவேளை, அது உண்மையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
விஜய்யின் பழைய படத்தின் பெயர்:
இந்தப் பாடலில் ‘கில்லி’ மற்றும் ‘கத்தி’ உள்ளிட்ட அவரது பழைய படத்தின் பெயர்கள் அடங்கிய வரிகள் அமைந்துள்ளது. அதாவது, “கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு. அதுதான் கணக்கு.. இந்த கத்தி வேற ரகம் வேணாம் ஸ்கெட்ச், எணக்கு புரிதா உணக்கு” மற்றும் மில்லி உள்ள போனா போதும்… கில்லி வெல்ல வருவான் மில்லி உள்ள போனா போதும் கில்லி வெல்ல வருவான் பார்.”
கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு அதுதான் கணக்கு..
இந்த கத்தி வேற ரகம் வேணாம் SKETCH’u எணக்கு புரிதா உணக்கு????#ThalapathyVijay #NaanReady #Thalapathy68 pic.twitter.com/Phh9mzTKAK— ???? ???? ???? ???? ???? ???? (@KVPKING_) June 23, 2023
விஜய்யின் அரசியலுக்கு முதல் படி?
ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு…. கேட்டாலே அதிரும் பார் உனக்கு….”போஸ்டர் அடி அண்ணே ரெடி” கொண்டாடி கொழுத்தணும்டி என்று வர்கள் அமைந்துள்ளது. இது அவரது அரசியல் நகர்வாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பொது இடங்களில் போஸ்டர் ஒட்டி அசுத்தப்படுத்துவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் பக்கம் மன்சூர் அலிகான்:
இந்த படத்தில், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் ஆகியோர் விஜய்க்கு எதிரியாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மன்சூர் அலிகானும் விஜய் பக்கம் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், ஆக்ஷ்ன் கிங் அர்ஜுனும் இந்த பாடலில் இடம் பெறுவார், இவரும் விஜய் பக்கம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
LCU-ல் லியோ:
இந்த நா ரெடி பாடலில் முக்கவாசி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக, LCU-ல் லியோ வருமா என்ற கேள்விக்கு, “புகையிலை அறுவடைக்கு தயரான Opponent அ களையெடுத்து” அப்படினு ஒரு வரிகள் அமைந்துள்ளது. அதில், ரோலக்ஸ் கழுத்தில் அடித்திருக்கும் தேள் படம் இதில் இடம் பெற்றுள்ளது. அது மட்டும் இல்லங்க… தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா என்ற வரியும் அமைந்துள்ளது.
மேலும், ரோலக்ஸின் கசாப் கடை கத்தி மற்றும் மாஸ்டர் படத்தில் விஜய் கையில் அணிந்திருக்கும் காப்பு, மன்சூர் அலிகான் சாப்பிடும் போது பாக்கெட் வைக்கப்பட்டிருக்கும் இதெல்லாம், LCU-ல் லியோ வருவதை முழுமையாக எடுத்துரைக்கிறது.
