Connect with us

News

இயக்குனர் மணிரத்னத்திற்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி.!

கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதி சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் வந்தியத்தேவன் கதாபாத்திர பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Karthi plays Vallavaraiyan Vanthiyathevan's character in Ponniyin Selvan's movie

Karthi plays Vallavaraiyan Vanthiyathevan’s character in Ponniyin Selvan’s movie. [Image Source: Google]

இந்நிலையில், வரலாற்றை திரித்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை உருவாக்கியுள்ளதாக படத்தின் இயக்குனர் மணிரத்னத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Ponniyin Selvan 2 glimpse video [Image Source : Twitter]

கல்கி நாவலைப் படிக்காத மனுதாரர், வரலாற்றைத் திரித்துள்ளதாக எப்படிக் கூற முடியும். மேலும், பொன்னியின் செல்வன் படம் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளதே தவிர வரலாற்றைத் தழுவி எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்னர்.

maniratnam

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ப்பிரம்மாண்டமாக உருவாகியுள் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Continue Reading
To Top