Celebrities
மனைவியுடன் விவாகரத்தா..? வேதனையுடன் மனம் திறந்த நடிகர் விஷ்ணு விஷால்.!
நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். கிரிக்கெட் அரசியல் நாடகமான இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Vishnu Vishal Smile [Image Source: Google]
மேலும் சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் விஷ்ணு விஷால், கடந்த வாரம் தனது ட்விட்டரில் ஒரு சிறிய ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அந்த ட்வீட்டில் “பரவாயில்லை. மறுபடியும் நான் முயற்சி செய்தேன். மீண்டும் தோற்று விட்டேன்” . என பதிவிட்டு இருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ட்வீட் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.

Vishnu Vishal Smile [Image Source: Google]
எனவே, நெட்டிசன்கள் பலரும் திருமண விவாகரத்துக்குத்தான் விஷ்ணு இப்படி ட்வீட் செய்துள்ளார் என்று வதந்தி தகவலை பரப்பினார்கள். அதற்கு வேதனையுடன் விளக்கம் அளித்த விஷ்ணு விஷால் “அனைவருக்கும். சில நாட்களுக்கு முன்பு எனது ட்வீட் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது… இது தொழில்முறை முன்னணியில் இருந்தது.

Vennila Kabadi Kulu Vishnu Vishal [Image Source: Google]
தனிப்பட்ட முறையில் அல்ல. ஒருவரை நம்பி நாம் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு. நாம் தோல்வியடையும் போது, நம்மை நாமே குற்றம் சாட்டுகிறோம். அதைத்தான் நான் சொன்னேன். எல்லாம் நன்றாக இருக்கிறது.” என விளக்கம் கொடுத்துள்ளார்.
