Celebrities
கல்யாணமே வேண்டாம்.! நாங்க எப்பவும் வேற மாறி.! ஸ்ருதி ஹாசன் காதலர் இப்படி சொல்லிட்டாரே.?!
நடிகர் கமலஹாசனின் மகளும் நடிகையுமாகிய ஸ்ருதிஹாசன் தற்போது வரைபட கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். முன்பெல்லாம் ரகசியமாக இருந்த இவர்களது காதல், தற்போது பெருமளவில் சமூக வலைதளப் பக்கங்களில் பேச்சு பொருளாகி உள்ளது.
மேலும் இவர்களது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஸ்ருதியின் காதலன் ஹசாரிகா அவர்கள், முதன் முறையாக தங்கள் காதல் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நாங்கள் தற்போது தான் டேட்டிங் செய்ய ஆரம்பித்து, ஒருவரையொருவர் காதலித்து வருகிறோம்.
இதையும் படியுங்களேன் .. என்னது வலிமை படமும் காப்பியா.?! சினிமா பிரபலத்தின் ‘திடுக்’ பேட்டி.!
வரைபடம், இசை ஆகியவற்றின் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறோம். இது எங்களின் கலை பயணத்துக்கு தூண்டுகோலாக உள்ள ஒரு ஆக்கபூர்வமான பயணம். நான் அவரால் ஈர்க்கப்பட்டது போல, அவரும் என்னால் ஈர்க்கப்பட்டுள்ளார்.
எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு, திருமணத்தைப் பற்றி சிந்திப்பதை விட புதிதாக ஏதாவது ஒன்றை உருவாக்குதில் தான் நேரத்தை செலவிடுகிறோம். மேலும் இது படைப்பாற்றலின் திருமணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
