News
சாகுந்தலம் திரைப்படத்திற்காக நடிகை சமந்தா எவ்வளவு கோடி சம்பளம் வாங்கினார் தெரியுமா..?
நடிகை சமந்தா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘சாகுந்தலம்’ திரைப்படம் “ஏப்ரல் 14 அன்று இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக தயாராக உள்ளது. படத்தின் ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

Shaakuntalam in theatres worldwide on April 14 [Image Source: Twitter]
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை சமந்தா வாங்கியுள்ள சம்பள விவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிக்க நடிகை சமந்தா கிட்டத்தட்ட 3 லிருந்து 4 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

Shaakuntalam samanatha [Image Source: Twitter]
முன்னதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க 7 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த சமந்தா ‘சாகுந்தலம்’ படத்திற்காக 3 கோடி மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளாராம். படத்தில் நடிக்க சமந்தா 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Shaakuntalam [Image Source: Twitter]
இந்த படத்தில், சச்சின் கெடேகர், கபீர் பேடி, டாக்டர் எம் மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நாகல்லா, ஜிஷு சென்குப்தா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார், படத்தில் அவர் பரத இளவரசராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
