News
தசரா படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா..?
அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் வெளியான பான்-இந்திய திரைப்படமான “தசரா”. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏற்கனவே படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

Dasara Trailer [Image Source : Twitter]
இந்த நிலையில், பலத்த எதிர்பார்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பது கிடைத்து வருகிறது என்றே கூறலாம்.

Dasara Teaser out now [Image Source: Twitter]
அதன்படி, தசரா திரைப்படம் வெளியான 1 நாளில் உலகம் முழுவதும் ரூ. 33 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dasara [Image Source: Twitter]
இந்த படத்தில் சாய் குமார், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி, ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
