Connect with us

News

துணிவு படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா..? இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ் தகவல்.!

துணிவு படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா..? இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ் தகவல்.!

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து முடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.  படத்திலிருந்து சமீபத்தில் வெளியான சில்லா சில்லா, காசேதான் கடவுளடா ஆகிய  பாடல்கள்  ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Gangstaa Thunivu 3rd single

Gangstaa Thunivu 3rd single [Image Source: Google]

வரும் டிசம்பர் 25-ஆம் தேதி படத்திலிருந்து மூன்றாவது பாடலான கேங்க்ஸ்டா என்ற பாடல் வெளியாகவுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட நேற்று வெளியானது. இந்த நிலையில், துணிவு படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தை பற்றி சமீபத்தில் எச்.வினோத் சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்களேன்- 50-வது நாள் இமாலய வெற்றி…OTT-யில் வெளியாகியும் திரையரங்குகளில் மாஸ் காட்டும் ‘லவ் டுடே’..!

ajith kumar and h.vinod

ajith kumar and h.vinod[Image Source: Google]

அப்போது அவரிடம் துணிவு படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் இருக்கிறது என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது அதற்கு பதில் அளித்த எச்,வினோத் படத்தில் மொத்தம் 4 பாடல்கள் உள்ளது. பாடலால் எல்லாமே அருமையாக வந்திருக்கிறது. ஜிப்ரான் நன்றாக இசையமைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

H Vinoth

H Vinoth [Image Source: Twitter]

மேலும்,  அஜித் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து பேசிய எச்,வினோத் ”  பட புரமோஷனுக்கு வரமாட்டார் என்று தெரிந்துதானே தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் எடுக்கிறார்கள். இதில் அஜித் மீது எந்த தவறும் இல்லை” என்று கூறியுள்ளார்.

Continue Reading
To Top