News
மைக் மோகன் மார்க்கெட் போனதற்கு காரணம் என்ன தெரியுமா..? உண்மையை புட்டு புட்டு வைத்த நடிகர்…
ஒரு காலகட்டத்தில் ரஜினி கமல்ஹாசனுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர் மைக் மோகன். இவருடைய படங்கள் வந்த அளவுக்கு ஹிட் ஆகிறதோ இவருடைய படங்களில் இடம்பெறும் பாடல்களும் அந்த அளவிற்கு ஹிட் ஆகிவிடும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருந்தது என்றே கூறலாம்.

mic mohan [Image Source : File Image ]
இந்நிலையில், மைக் மோகன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனையடுத்து, அவருடைய மார்க்கெட் போனதற்கு முக்கிய காரணமே அவரை பற்றிய வதந்தி தகவல் தான் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பயில்வான் ரங்கநாதன் ” மைக் மோகன் நடித்த இரண்டு படங்களுமே அவருக்கு வெற்றியை கொடுத்துவிட்டது.

mic mohan [Image Source : File Image ]
பிரபல தயாரிப்பு நிறுவனமான AVM நிறுவனமும் அவருக்கு சம்பளம் கொடுத்து பல படங்களில் நடிக்க அவரை கமிட் செய்தது. மோகனுக்கு வெள்ளி விழா நாயகன் என்கிற பெயர் கூட இருக்கு.ஆனால், மைக் மோகனுக்கு கன்னட குரல் என்பதால் அவர் நடிக்கும் படங்களில் அவருக்கு பதிலாக நடிகர் விஜயின் மாமனார் சுரேந்தர் தான் கொடுத்து வந்தார்.

mic mohan [Image Source : File Image ]
தொடர்ந்து பல படங்களுக்கு சுரேந்தர் மைக் மோகனுக்கு டப்பிங் பேசி வந்தார். ஒரு நாள் சுரேந்தர் என்னுடைய குரலால் தான் மைக் மோகன் முன்னணி நடிகராக வளம் வந்தார் என கூறிவிட்டார். இது மைக் மோகனுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் மைக் மோகன் இனிமேல் தான் நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் தனது சொந்த குரலில் பேசுவேன் என அதிரடியான முடிவை எடுத்தார்.

actor mic mohan [Image Source : File Image ]
இதையும் படியுங்களேன்- எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல…பதறிப்போய் வீடியோ வெளியிட்ட நடிகை சுரேகா வாணி…
பிறகு, சொந்த குரலில் அவர் பேசி வெளிவந்த அவருடைய 3 படங்கள் தோல்வியை தழுவியது. அதுமட்டுமின்றி மைக் மோகன் ஒருவரை காதலித்தார். பிறகு அவருக்கு திருமணம் என்றார் செய்தி வெளிவந்தவுடன் பாதி மார்க்கெட் குறைந்துவிட்டது. பிறகு அவர் நோயால் இறந்த்துவிட்டதாகவும் வதந்தி தகவல் பரவியது. இந்த வதந்திகள் தான் அவருடைய மார்க்கெட் போனதற்கு காரணம்” என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
