Movies
லியோ திரைப்படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா..?
நடிகர் விஜய் தற்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் அடுத்ததாக மீதி இருக்கும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.

leo vijay movie [Image Source: Twitter]
இதற்கிடையில் இந்த திரைப்படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளது என்பதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இந்த திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மூன்று பாடலுமே ரசிகர்களுக்கு பிடித்த ஒரு போல அனிருத் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Anirudh-Ravichander [Image Source: Google]
ஏற்கனவே விஜய் அனிருத் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. எனவே கண்டிப்பாக லியோ படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே அதைப் போல பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘Leo’ shooting schedule [Image Source: Twitter]
மேலும் லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
