Connect with us
maaveeran sivakarthikeyan

Celebrities

மாவீரன் படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் மாவீரன். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில், இந்த படத்தை  பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தன்னை அழைத்து பாராட்டு தெரிவித்ததாகவும், அதற்க்கு நன்றி தெரிவித்தும் நாளை ஜெயிலர் படம் வெளியாவதால் படத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் வீடியோ ஒன்றை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

MaaveeranPreReleaseEvent

MaaveeranPreReleaseEvent [Image Source : Twitter /@@dp_karthik]

அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது ” நான் இப்போது வெளியிடும் வீடியோ முதலிலே வெளியிடவேண்டியது. ஆனால், தாமதமாக வெளீயீடுகிறேன் அதனால் முதலில் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். மாவீரன் படம் வெற்றிகரமாக 25வது கடந்து ஓடிகிட்டு இருக்கு. இவ்வளவு பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றி, பாராட்டு தெரிவித்த அனைத்து பிரபலங்களின் ரசிகர்கள், அனைத்து மாநில ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் என் ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

sk

sk [Image Source : Twitter /@CinemaWithAB]

குறிப்பாக படத்தை பார்த்துவிட்டு ரஜினி சார் எனக்கு கால் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அவருடைய பாராட்டு எங்களுடைய மொத்த படக்குழுவுக்கும் கொடுக்கவேண்டும். . குறிப்பாக எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருந்துச்சு. அவர் மாவீரன் ரிலீஸ் அப்ப ஊர்ல இல்லை, ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி, பட வெளியீடு என பிஸியான நேரத்தில் ரஜினி பார்க்காமல் மிஸ் ஆகிடுமே என்று கவலைப்பட்டேன்.

ஆனால், ரஜினி சார் படம் பார்த்துவிட்டு ரஜினி சார் பாராட்டியதை மறக்கவே மாட்டேன். நான் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன் ரஜினி சாருடைய ரசிகன் என்று. நாளை யாராலும் மறக்க முடியாத ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சரித்திரத்தில் இன்னும் ஒரு சிறப்பான நாளாகம் இருக்கும். தலைவா உங்களை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறோம். என்றும் உங்கள் ரசிகன். இன்னும் நீங்கள் எங்களை மகிழ்வித்து கொண்டே இருக்க வேண்டும். நாங்கள் உங்களை கொண்டாடி கொண்டே இருக்க வேண்டும்” எனவும் வீடியோவில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top