அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகள் யார் யார் தெரியுமா..? லிஸ்ட் இதோ.!
சினிமாவில் இருக்கும் பல நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாததாலும், பட வாய்ப்புகள் குவிவதற்காகவும் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிப்பது உண்டு. அந்த வகையில், தமிழ் சினிமாவில் எந்தெந்நத நடிகைகள் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் துணிச்சலாக நடித்தார்கள் என்ற விவரத்தை பற்றி பார்க்கலாம்.
1.அனுஷ்கா – வானம்

Anushka Shetty [Image Source: Twitter]
நடிகை அனுஷ்கா நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பலரது மனதை கொள்ளையடித்துவிட்டார். இப்போது அவர் நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் குறையவே இல்லை. ஆனால், ரசிகர்கள் அனைவர்க்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில், நடிகை அனுஷ்கா சிம்பு நடிப்பில் வெளியான “வானம்” திரைப்படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடித்திருந்தார்.
2.சதா -டார்ச் லைட்

Sadha [Image Source: Twitter]
ஒரு காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்த நடிகை சதா பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் “டார்ச் லைட் ” திரைப்படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடித்தார். ஆனாலும், அந்த கதை சற்று வித்தியாசமாக இருந்ததால், படத்தில் அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று துணிச்சலாக நடித்ததால் நடிகை சதாவை பலரும் பாராட்டினார்கள்.
3.சங்கீதா – தனம்

Sangeetha [Image Source: Twitter]
பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சங்கீதா கிரிஷ். இவர் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான “தனம்” திரைப்படத்தில் அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் நடிகை சங்கீதா கிரிஷ் அதனை அருமையாக நடித்து கொடுக்க கூடிய நடிகை. ஆனால் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இப்போது வரவில்லை.
இதையும் படியுங்களேன்- என் கணவருக்கு ஓகே-ன்னா தான் அந்த விஷயத்தை நான் செய்வேன்…பிரியாமணி ஓபன் டக்..!
4. ஸ்னேகா – புதுப்பேட்டை

Sneha [Image Source: Twitter]
ரசிகர்கள் அன்புடன் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் ஸ்னேகா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “புதுப்பேட்டை” படத்தில் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
5.ரம்யா கிருஷ்ணன் – பஞ்சஜத்திரம்

Ramya Krishnan [Image Source: Twitter]
நடிகை ரம்யா கிருஷ்ணன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “பஞ்சதந்திரம்” படத்தில் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் வரும் காட்சிகள் வேண்டுமானால் ஒரு சில காட்சிகள் தான். இதை போல, “சூப்பர் டீலக்ஸ்” படத்திலும் ரம்யா கிருஷ்ணன்அதுபோல ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
6.ரித்விகா – டார்ச் லைட்

Rithvika [Image Source: Twitter]
சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர். இவருக்கும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால்”டார்ச் லைட் ” திரைப்படத்தில் நடிகை சதாவுடன் நடித்திருந்தார்.
7.பிந்து மாதவி – வெப்பம்

Bindu Madhavi [Image Source: Twitter]
ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சிறிய சிறிய படங்களில் நடித்து கலக்கி வந்த பிந்துமாதவியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொள்வதற்கு முன்பே பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் வெப்பம் படத்தில் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நடிகைகள் அனைவருமே இந்த மாதிரி ஒரு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததற்கு அவர்களது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இதில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்பதை கீழே பதிவிடுங்கள்.
