லவ் டுடே பிரதீப்பிற்கு அடித்த ஜாக்பாட்.! அடுத்தாக யாரை வைத்து படம் இயக்குகிறார் தெரியுமா..?
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

Pradeep Ranganathan [Image Source: Google]
5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் மாஸ் ஹீரோ ஒருவரை வைத்து படம் இயக்கம் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

Rajinikanth [Image Source: Google]
அதன்படி, அவர் ரஜினியை வைத்து அடுத்தாக ஒரு திரைப்படம் இயக்கவுள்ளாராம். ஏற்கனவே லவ் டுடே படத்தை பார்த்து விட்டு பிரதீப்பை ரஜினி பாராட்டியுள்ள நிலையில், அவரிடம் ஒரு கதை ஒன்றையும் ரஜினி கேட்டுள்ளாராம். பிரதீப் கூறிய கதை அவருக்கு பிடித்து போக சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

Pradeep Ranganathan Rajinikanth [Image Source: Twitter]
எனவே பிரதீப் -ரஜினி கூட்டணி இணைவது கிட்டத்தட்ட உறுதி என்றே சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள். இவர்கள் இணையப்போகும் அந்த படத்தை ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
