Gossips
‘சூது கவ்வும் 2’ படத்தில் கதாநாயகன் யார் தெரியுமா?
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த ‘சூது கவ்வும்’ திரைப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
எதிர்பார்ப்பு இல்ல்லாமல் வெளியான இந்த படத்துக்கு பலது வரவேற்பு கிடைத்தது. தற்போது, சூது கவ்வும் 2ம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடிக்க இருப்பதாக நம்ப தக்க சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் சிலர், இதன் இரண்டாம் பாகத்தில் இருப்பார்கள். ஆனால், நடிகை சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரத்தை இறுதி செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
முதல் படத்தில் நாயகனாக நடித்த விஜய் சேதுபதியின் கேரக்டர் இதிலும் வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிரபுதேவா நடிப்பில் இன்னும் வெளிவராத யுங் மங் சங் என்ற படத்தை தயாரித்த அர்ஜுன், இதன் தொடர்ச்சியை இயக்கவுள்ளார்.
