Connect with us

News

பருத்திவீரன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பிரியாமணி, ஆகியோர் நடிப்பில் வெளியான கல்க் க்ளாஸிக் திரைப்படம் பருத்திவீரன். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ இசையமைத்துள்ளார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Paruthiveeran Ameer Sultan

Paruthiveeran Ameer Sultan [Image Source: Twitter]

இந்த திரைப்படம் தான் கார்த்திக்கு முதல் திரைப்படம் ஆனால், படத்தில் கார்த்தி முதல் படத்தில் நடித்தது போலவே நடித்திருக்கமாட்டார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பல படங்களில் முன்பே நடித்தது போல மிகவும் எதார்த்தமாக நடித்திருப்பார்.

இதையும் படியுங்களேன்- கண்டதும் காதல்…ஈரம் சொட்ட சொட்ட புகைப்படங்களை வெளியிட்ட அமலா பால்.!

Paruthiveeran

Paruthiveeran [Image Source: Google]

அவரை தவிர இந்த திரைப்படத்தில் வேறு யாரும் ஹீரோவாக நடித்தால் செட் ஆகாத அளவிற்கு அருமையாக நடித்திருப்பார் என்றே கூறலாம். இந்த நிலையில், பருத்திவீரன் படம் வெளியாகி சமீபத்தில் 16 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தது.  இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடித்த தேர்வு செய்தவர் குறித்த  தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

vijay paruthiveeran

vijay paruthiveeran [Image Source: Twitter]

அதன்படி, இந்த திரைப்படத்தின் கதையை முதலில் இயக்குனர் அமீர்  விஜயிடம் தான் கூறியிருக்கிறாராம் . பிறகு சில காரணங்களால் விஜய் நடிக்க மறுத்துவிட்டதாகவும் பிறகுதான் அமீர் கார்த்தியிடம் இந்த கதையை கூற கார்த்தி சம்மதம் தெரிவித்து விட்டு நடித்தாராம். படமும் மிக பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது.

Continue Reading
To Top