Celebrities
பியர் பிடிக்குமா ..? விஸ்கி பிடிக்குமா..? ‘நச்’ பதில் கொடுத்த ஸ்ருதிஹாசன்.!
நடிகை ஸ்ருதிஹாசன் எப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும். வீடியோக்களையும் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், இவர் நேற்று இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் ஒரு கேள்வி பதில் அளித்து வந்தார். ரசிகர்கள் தன்னிடம் வேடிக்கையான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் என்று நடிகை குறிப்பிட்டுள்ளார்.

Shruti Haasan[Image Source: Twitter]
அப்போது ரசிகர் ஒருவர் ஸ்ருதிஹாசனிடம் விஸ்கி, பீர் மற்றும் காக்டெய்ல் ஆகியவற்றிற்கு இடையே மதுபானத்தை தேர்வு செய்யும்படி கேட்டார். அதற்காக பதில் அளித்த ஸ்ருதிஹாசன் நான் மது அருந்துவதில்லை என்று தெரிவித்தார். அவருடைய பதில், “நான் நிதானமான வாழ்க்கையை வாழ்கிறேன். நான் இப்போது 6 ஆண்டுகளாக நிதானமாக இருக்கிறேன்.

Shruti Haasan [Image Source : instagram]
எனவே அதனால் நான் மதுவைத் தொடுவதில்லை, இவை எதுவும் எனக்குப் பிடித்தவை அல்ல. அவர் சில சமயங்களில் மது அல்லாத பீர் குடிப்பதாகவும் தெரிவித்தார். ஒரு ரசிகர் அவளுடன் டேட்டிங் செய்ய முடியுமா என்று கேட்டதற்கு, நடிகை இல்லை என்று நேரடியாக பதிலளித்தார்.
இதையும் படியுங்களேன்- மீண்டும் சம்பளத்தை உயர்த்திய கவின்.! ஒரு படத்திற்கு இத்தனை கோடியா..?

Shruti Haasan in black dress [Image Source : instagram]
தெலுங்கில் கடைசியாக ‘வால்டர் வீரையா’ மற்றும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ ஆகிய படங்களில் நடித்த நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த இரண்டு வருடங்களாக அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்களின் மனதில் எப்போது ஒரே போலவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
