News
நீ பாட்டு எதுவும் பாடுகிறாயா..? இளையராஜா கேட்டும் மறுத்த ஜிவி தங்கை.!
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘விடுதலை பாகம் 1’ வரும் மார்ச் 31-ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளிவர உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் எதிர்பார்ப்பை எகிற செய்தது என்றே கூறலாம்.

Viduthalai Official Release Date [Image Source: Twitter]
படத்தில் கதாநாயகியாக ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். மேலும். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.
இதையும் படியுங்களேன்- பத்து தல படத்தை பார்த்து மிரண்டு போன சிம்பு.! முதல் விமர்சனம் இதோ.!

Bhavani Sre AND ilayaraja [Image Source: Twitter]
இந்நிலையில். இசையமைப்பாளர் இளையராஜா இளையராஜா பவானி ஸ்ரீயின் பின்னணியை கேட்டுவிட்டு இந்த படத்தில் நீ ஏதும் பாடுகிறாயா..? என கேட்டுள்ளாராம். அதற்கு பவானி ஸ்ரீ மறுப்பு தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தையும் இந்த ஆண்டே படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஏனென்றால், முதல் பாகம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடும். எனவே, இரண்டாவது பாகத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்க வேண்டாம் என்பதற்காக விரைவில் விடுதலை 2 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
