News
சும்மா அண்ணாச்சியை கலாய்க்காதீங்க…கொந்தளித்த பிக் பாஸ் அமுதவாணன்…
சரவண ஸ்டாரின் உரிமையாளர் சரவணன் அண்ணாச்சி தமிழ் சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தி லெஜன்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், சுமாரான வெற்றியை பெற்றது. படத்தைப் பார்த்து பலரும் சரவணன் அண்ணாச்சியை ட்ரோல் செய்தார்கள் என்றே கூறலாம்.

Legend Saravanan [Image Source : Twitter /@yoursthelegend]
ஆனால் விமர்சனங்கள் மற்றும், தன்னை பற்றி யார் ட்ரோல் செய்தாலும் கூட அதையெல்லாம் கண்டு கொள்ளாத அண்ணாச்சி தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கிடையில், அண்ணாச்சியை ட்ரோல் செய்யாதீங்க அவர் மிகவும் நல்ல மனிதர் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான அமுதவாணன் கூறியுள்ளார்.

amudhavanan [Image Source : File Image ]
பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமுதவாணன் ” எல்லாரும் அண்ணாச்சியை கலாய்கிறார்கள் . ஆனால் அவர் அதை பற்றியெல்லாம் கவலையே படமாட்டார். ஒருமுறை அவருடைய கெட்டப் போட்டு கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் நடித்து காட்டினேன். நான் நடித்த அந்த வீடியோவை அண்ணாச்சியை பார்த்துவிட்டு என்னை ஒருநாள் பார்த்தவுடன் என்னிடம் நீங்கள் என்னுடைய கட்டத்தில் சூப்பராக நடித்தீர்கள் என பாராட்டினார்.

amudhavanan about legent annachi [Image Source : File Image ]
இதையும் படியுங்களேன்-சினிமா வாழ்க்கையே போச்சு…25 லட்சம் ஏமாத்திட்டான்…சிவகார்த்திகேயன் படத்தால் நொந்துபோன பிரபல நடிகர்…
நடிப்பதை போலவே சூப்பராக நடனமும் ஆடினீர்கள் நடனம் கற்றுக் கொண்டீர்களா..? இல்லை நீங்கள் நடனம் மாஸ்டரா..? என்று கேட்டார் எப்படி இவ்வளவு சூப்பராக ஆடுகிறீர்கள் எப்படி எப்படி நடிக்கிறீர்கள் என்று என்னிடம் அறிவுரை கேட்டார். இந்த வயதிலும் கூட இன்னும் கடின உழைப்பு செய்ய வேண்டும் என யோசிக்கிறார் இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை சும்மா கலாய்க்காதீங்க அவர் மிகவும் நல்ல மனிதர்” என்று அமுதவாணன் கூறியுள்ளார்.
