Celebrities
அந்த மாதிரி பண்ணாதீங்க…எங்களுக்கு குடும்பம் இருக்கு..நடிகை ரித்திகா சிங் வேண்டுகோள்.!
நடிகை ரித்திகா சிங் தற்போது ‘இன் கார்’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹர்ஸ் வரதன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Rithika Singh in a green lehenga. [Image Source: Instagram/ritika_offl]
அதன் ஒரு பகுதியாக நடிகை ரித்திகா சிங் சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் அவரிடம் பல கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார். அந்த பேட்டியில் மீம்ஸ் போடுபவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார். இது குறித்து பேசிய ரித்திகா சிங் ” சோஷியல் மீடியாவில் சமீபகாலமாக நடிகைகளின் புகைப்படங்களை எடிட் செய்கிறார்கள்.

Rithikasingh [Image Source: Twitter]
இந்த பிரச்னையில் தற்போது நானும் சிக்கியுள்ளேன். தயவு செய்து இது போல ஆபாச மீம்ஸ்கள் போடாதீங்க..எங்களுக்கும் குடும்பங்கள் உள்ளது. அதனை நீங்கள் நினைவு வைத்துகொள்ளுங்கள். இனிமே இது போன்ற மீம்ஸ் தயவு செய்து போடாதீங்க..” என சற்று வருத்தத்துடன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- 2 படம்… 20 கோடி சம்பளம்…எல்லாம் போச்சு…கடும் வருத்தத்தில் நயன்தாரா.!

Rithika Singh in a yellow t-shirt and jeans. [Image Source: Instagram/ritika_offl]
மேலும், நடிகை ரித்திகா சிங் ‘இன் கார்’ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
