News
நன்றியை மறக்க கூடாது…வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்தது விஜயகாந்த் தான்…பிரபல நடிகர் வருத்தம்.!!
நடிகர் விஜயகாந்த் மற்றும் வடிவேலு இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக இணைந்து நடித்த படங்களின் காமெடி காட்சிகள் இன்றுவரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது. இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த காலகட்டத்தில் அன்னான் – தம்பி போல பழகி வந்தார்கள் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். பிறகு அரசியல் ரீதியாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட காரணத்தால் இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதையும் நிறுத்துக்கொண்டார்கள்.

vadivelu and vijayakanth [Image Source : File Image ]
இந்நிலையில், வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் சின்னக்கவுண்டர் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஏனென்றால், அந்த சமயம் தான் வடிவேலு நடிக்க வந்த ஆரம்ப காலகட்டம். அந்த சமயத்தில் வடிவேலு மிகவும் கஷ்டபட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்ததே நடிகர் விஜயகாந்து தான் என பிரபல நடிகரான பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Bava Lakshmanan About Vijayakanth , vadivelu [Image Source : File Image ]
இது குறித்து பேசிய பாவா லட்சுமணன் “சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலு நடிக்கவேண்டும் என்று அவருக்கு விஜயகாந்த்தான் வாய்ப்பு கொடுத்தார். அந்த சமயத்தில் வடிவேலுக்கு வேஷ்டி சட்டை எடுத்து கொடுத்தார். அந்த நன்றியெல்லாம் வடிவேலு மறக்கவே கூடாது. வடிவேலு விஜயகாந்தை பற்றி பேசியது எல்லாம் ரொம்ப கஷ்டமாக இருந்தது.

vijayakanth and vadivelu [Image Source : File Image ]
அதிலிருந்தே நான் வடிவேலுவிடம் ஒதுங்கிவிடலாமா என யோசித்தேன். நடிகர் சுப்புராஜ் ஒதுங்கிவிட்டார். நானும் கொஞ்சம்..கொஞ்சம் அவரிடம் இருந்து ஒதுங்கிவிட்டேன். சினிமாவில் விஜய் காந்த் மாதிரி சிரமத்தை சந்தித்தவர்கள் யாருமே இருக்க முடியாது. அவரை போல ஒரு நல்ல மனிதரும் இருக்கவே முடியாது. எப்போதுமே, அவர்கிட்ட சாப்பாடு கேட்டால் கிடைக்கும்.

actor vijayakanth [Image Source : File Image ]
இதையும் படியுங்களேன்- உங்க மனசு ரொம்ப பெருசு.! பிரச்சனை இருந்தும் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்த எம்ஜிஆர்..!!
எம்ஜிஆருக்கு பிறகு பசிக்கு சாப்பாடு போட்ட ஒரே ஆள் விஜயகாந்த் தான்” என விஜயகாந்தை பற்றி பெருமையாக வருத்தத்துடன் பேசியுள்ளார். இவர் பேசியதை பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள் கேப்டன் எப்போதுமே நல்ல மனம் கொண்டவர் எனவும், கேப்டன் திரும்ப பழைய நிலைக்கு வரவேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.
