News
ஓவரா பண்ணாதீங்க ஜோதிகா…அப்புறம் பின் விளைவு ரொம்ப பயங்கரமா இருக்கும்…
சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா தற்போது தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும், தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் கூட சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
View this post on Instagram
அந்த வீடியோவில், நடிகை ஜோதிகா லெக் பிரஸ் (leg press) எடையை 252 கிலோவிலிருந்து 352 கிலோவாக உயர்த்தி உடற்பயிற்சி செய்வதை காணலாம். இது முற்போக்கான சுமை அதாவது ஆங்கிலத்தில் கூறவேண்டும் என்றால் (progressive overload ). இதைப்போல கடுமையாக உடற்பயிற்சி செய்தல் உடலில் பாதிப்புகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஜோதிகா ஓவரா உடற்பயிற்சி செய்யவேண்டாம் என அன்புடன் பாச கட்டளையிட்டு வருகிறார்கள்.

jyothika leg press [Image Source : File Image ]
நடிகை ஜோதிகா தற்போது மம்முட்டிக்கு ஜோடியாக மலையாள திரைப்படமான காதல் திரைப்படத்திலும், ஹிந்தி திரைப்படம் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதனால் தான் ஜோதிகா வெறித்தமனாக உடற்பயிற்சி செய்து வருகிறார் என கூறப்படுகிறது. படத்திற்காக இதுவரை இல்லாத அளவிற்கு லெக் பிரஸ் (leg press) எடையை 352 கிலோவாக உயர்த்தி உடற்பயிற்சி செய்வதால் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்களும் ஜோதிகா மேடம் ரொம்ப ஓவரா போறீங்க என கூறி வருகிறார்கள்.

jyothika leg press workout [Image Source : File Image ]
இதையும் படியுங்களேன்- எனக்கு 2 டிக்கெட் போடுங்க..அன்று நடந்த அசம்பாவித சம்பவம்… அதிர்ச்சியில் தமன்னா எடுத்த முடிவு…
மேலும், முற்போக்கான சுமை (progressive overload ) என்றால் என்ன, அது எவ்வாறு உதவுகிறது? என்பது பற்றி தி பாடி சயின்ஸ் அகாடமியின் இணை நிறுவனர் வருண் ரத்தன் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த உடற்பயிற்சி செய்வதால் நம்முடைய தசை வலுவாக மாறும். நீங்கள் புதிதாக இந்த பயிற்சியை தொடங்கினீர்கள் என்றால் ஒரு சவாலாக இதனை நீங்கள் உணர்வீர்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
