Connect with us
sneha prasanna

News

பிரசன்னாவுக்கு முன்னாடியே மற்றோருவருடன் நிச்சியதார்த்தம்? வெளியான ஸ்னேகாவின் சீக்ரெட்.!!

ரசிகர்களால் அன்புடன் புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை ஸ்னேகா தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அப்படி இருந்தும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் கொஞ்சம் கூட குறையவே இல்லை என்றே கூறலாம். இந்நிலையில், ஸ்னேகா குறித்த பரபரப்பான தகவல் ஒன்றை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Sneha

Sneha [Image Source : Instagram/@realactress_sneha]

இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” நிறையபேருக்கு தெரியாத ஒரு விஷயம் அதை நான் சொல்லியே ஆகவேண்டும். ஏனென்றால், 1ஒரு 15 வருடங்கள் ஆகிவிட்டது என்றால் எல்லாரும் அதனை மறந்துவிடுவார்கள். பிறகு நான் அதனை நியாபகம் செய்தால்தான் அது தெரிந்துகொள்ள முடியும். புன்னகை அரசி ஸ்னேகா எந்த வேடங்கள் கொடுத்தாலும் அருமையாக நடிக்க கூடியவர். அந்த அளவிற்கு அவர் அருமையான நடிகை தான்.

Sneha

Sneha [Image Source : Instagram/@realactress_sneha]

ஸ்னேகா பிரபல தயாரிப்பாளர் ஒருவரை முன்னதாக நிச்சியதார்தம் செய்துகொண்டார். இவர்கள் இருவருமே வைர மோதிரத்தை மாற்றிக்கொண்டார்கள். பிறகு நிச்சியதார்த்தம் முடிந்த 2 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அந்த தயாரிப்பாளரை விட்டு நடிகை ஸ்னேகா விலகி விட்டார். விலகிய பிறகு தான் ஸ்னேகா பிரசன்னாவை காதலித்தார்.

Sneha prasanna

Sneha prasanna [Image Source : Instagram/@realactress_sneha]

காதலித்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் 2 பெண்குழந்தை உள்ளனர். பிரசன்னாவிடம் விளம்பர படத்திற்காக சென்றோம் என்றால் தனக்கு ஜோடியாக நடிக்க ஸ்னேகாவை போடுங்கள் என தான் கூறுவாராம். அதைப்போல, ஸ்னேகாவிடம் ஏதேனும் விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் தனக்கு ஜோடியாக நடிக்க தனது கணவர் பிரசன்னாவை போடவேண்டும் என கூறுவாராம்.

Sneha

Sneha [Image Source : Instagram/@realactress_sneha]

இதனால் தான் இருவரும் இணைந்து பல விளம்பர படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள்” என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்து பரபரப்பான தகவல்களையும் அவர்களை பற்றி கடுமையாக விமர்சிப்பதையும் இவர் வழக்கமாக தான் வைத்துள்ளார் என பயில்வான் ரங்கநாதனை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Continue Reading
To Top