News
அப்பா கூட சேர்ந்து அத மட்டும் பண்ணமுடியல… நடிகை ஸ்ருதிஹாசன் வேதனை.!!
நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என பலரும் விருப்ப படுவது உண்டு. அந்த வகையில், கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனும் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்ததாகவும், பிறகு அந்த பாடல் பாதியிலே நின்று போனதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

shruti haasan and kamal haasan [Image Source : File Image ]
இது குறித்து பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் ” எனக்கும் அப்பா கூட சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. நானும் அப்பாவும் சேர்ந்து ஒரு படத்தில் ஒன்றாக நடித்துக்கொண்டிருந்தோம். ஆனால், அந்த திரைப்படம் சில காரணங்களால் ஸ்டாப் ஆகிவிட்டது. அந்த படம் பாதியில் நின்று போனது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

shruti haasan and kamal haasan [Image Source : File Image ]
இனிமேல் அதே போல அவருடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என ஆர்வத்துடன் இருக்கிறேன். அப்படி ஒரு படத்தில் மட்டும் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். கடவுள் அருளால் அந்த மாதிரி ஒரு வாய்ப்பு எதிர்காலத்தில் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அப்பா இப்போது மிகவும் பிஸியாக இருக்கிறார்.

shruti haasan and kamal haasan [Image Source : File Image ]
இப்போது அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்றால் அது கஷ்டமான விஷயம் தான். ஆனால், அப்பாவுடன் நடிக்க ரொம்ப ரொம்ப ஆவலாக காத்திருக்கிறேன்” என சற்று எமோஷனலாக பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் அனைவரும் கவலைவேண்டாம் விரைவில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறி வருகிறார்கள்.
