Celebrities
அவர் கூட நடிச்ச பணமே வேண்டாம்! தாராளம் காட்டும் நடிகை வாணிபோஜன்!
நடிகை வாணிபோஜன் சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் பரத்திற்கு ஜோடியாக நடித்த லவ் திரைப்படம் கூட கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் கதை அருமையாக இருந்த காரணத்தால் படம் பலருக்கும் பிடித்து போக படத்தை பாராட்டி வருகிறார்கள்.

VaniBhojan [Image Source : File Image ]
இந்நிலையில், படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழுவுடன் வாணிபோஜன் பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வாணிபோஜன் பல விஷயங்களை பகிர்ந்தார். அதில் குறிப்பாக விஜய்யை பற்றி மனம் திறந்து பேசினார்.

vijay [Image Source : Twitter /@ActorVijayFP]
விஜய் குறித்து பேசிய வாணிபோஜன் ” எனக்கு சிறிய வயதில் இருந்தே விஜய் சாரை மிகவு பிடிக்கும் அவருடைய நடனத்தை மட்டுமே ஒரு நாள் முழுவதும் கூட பார்ப்பேன். அந்த அளவிற்கு நான் விஜய் சாருடைய மிகப்பெரிய தீவிர ரசிகை. என்னுடைய வாழ் நாள் கனவு என்னெவென்றால், அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்பது தான்.

Vani Bhojan [Image Source : Instagram/@vanibhojan]
கண்டிப்பாக அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நான் நம்புகிறேன். கண்டிப்பாக அவருடன் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றால் அதற்கு பணம் கூட வாங்கமாட்டேன் இலவசமாகவே நடிப்பேன்” எனவும் நடிகை வாணிபோஜன் தெரிவித்துள்ளார்.
