Movies
ஓடிடியில் வெளியாகியும் குறையாத மக்கள் கூட்டம்….! வசூலில் மாஸ் காட்டிய வாத்தி.!
நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே கூறலாம். இப்படம் கல்வி மாஃபியாவைச் சுற்றி வரும் ஒரு சமூக படம் என்றும், கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராக ஒரு இளைஞனின் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Vaathi box office [Image Source: Twitter]
இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- பியர் பிடிக்குமா ..? விஸ்கி பிடிக்குமா..? ‘நச்’ பதில் கொடுத்த ஸ்ருதிஹாசன்.!

Vaathi [Image Source: Twitter]
இந்த திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேற்று வெளியானது. ஓடிடியில் வெளியாகியும் கூட இன்னும் படத்தை பார்க்க மக்கள் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக சென்று கொண்டு இருக்கிறார்கள். இதனையடுத்து படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

Samyuktha Menon Vaathi [Image Source: Twitter]
அதன்படி, இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 118-கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தனுஷ் சினிமா கேரியரில் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் என்று கூறப்படுகிறது.
As per producers, #Vaathi is Dhanush’s career highest box office (₹118 crores). pic.twitter.com/OxfqTWgIWo
— LetsCinema (@letscinema) March 17, 2023
