Connect with us

Celebrities

நயன்தாரா முதல் சௌந்தர்யா ரஜினிகாந்த் வரை.! 2022-ல் அம்மாவான பிரபல நடிகைகள்…

நயன்தாரா முதல் சௌந்தர்யா ரஜினிகாந்த் வரை.! 2022-ல் அம்மாவான பிரபல நடிகைகள்…

கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கி வந்த பிரபலங்களும் கலக்கிய பிரபலங்கள் பலரும் திருமணம் முடித்துக்கொண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். அந்த வகையில், தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி பேசுவதை ரசிகர்கள் விரும்பவது வழக்கம். அதன்படி, 2022 ஆம் ஆண்டில், சில முக்கிய நடிகைகள் தங்கள் குழந்தைகளை வரவேற்றனர். யார் அந்த பிரபலகள் என்று ஒரு பார்வை பார்க்கலாம்.

Nayanthara Vignesh

Actress Nayanthara [Image Source: Twitter]

நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் இந்த ஆண்டு அக்டோபரில் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை வரவேற்றனர். இந்த ஜோடி ஜூன் 9-ஆம் சென்னையில் உள்ள பிரபல ரிசார்ட் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர்.

Nayanthara with twin boys

Nayanthara with twin boys [Image Source: Google ]

மேலும், இந்த திருமண விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷாருக்கான் உட்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் வருகை தந்திருந்தனர். மேலும், இந்த ஜோடி தீபாவளிக்கு தங்களின் இரட்டை ஆண் குழந்தைகளுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துகொண்டு உருக்கமான பதிவையும் பதிவிட்டு இருந்தனர். ஆனால், இன்னும் தங்கள் குழந்தைகளின் பெயர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kajal Aggarwal shared baby photos

Kajal Aggarwal shared baby photos [Image Source: Google]

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால், பிரபல தொழிலதிபரான கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்டார். மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி அவர்களுக்கு நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. காஜலும் அவரது கணவரும் தங்கள் மகன் பிறந்ததிலிருந்து அவருக்காக அர்ப்பணித்து வருகிற்னறனர்.

kajal aggarwal

Kajal Aggarwal shared baby photos [Image Source: Google]

குழந்தை பிறந்து நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்தார். மேலும், காஜலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி, தனது குழ்நதை நீலின் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். கொரோனா தொற்றுநோய் காரணமாக மும்பையில் நடந்த ஒரு குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களின் மத்தியில் 2020-ல் திருமணம் செய்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால்.

இதையும் படிங்களேன் – வசூலில் தொடர் சரிவை சந்தித்த அவதார் 2.! அடுத்த பாகம் வெளியகுமா?

Chinmayi-RahulRavindran

Chinmayi RahulRavindran[Image Source: Google]

சின்மயி

நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்துகொண்ட பாடகி சின்மயிக்கு இந்த ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தங்கள் குழந்தைகளின் பெயர்களுடன் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டனர்.

Rahul Ravindran is Chinmayi's child

Rahul Ravindran is Chinmayi’s child [Image Source: Google]

இவர்களது, பெண் குழந்தைக்கு டிரிப்தா என்றும், ஆண் குழந்தைக்கு ஷ்ரவாஸ் என்றும் பெயர் வைத்துள்ளனர். இதற்கிடையில், சின்மயி கர்ப்பமாகி யாரும் காணாமல், அவர் வாடகைத் தாய் மூலம் தான் குழந்தையை வரவேற்றதாக பலரும் நினைத்தனர். ஆனால், சின்மயி அந்த வதந்திகளை நிராகரித்து, தனது கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்டார்.

Pranitha Subhash Baby

Pranitha Subhash Baby [Image Source: Google]

பிரணிதா சுபாஷ்

நடிகை பிரணிதா, பிரபல தொழிலதிபர்ரான நித்தி ராஜு என்பவரை 2021 மே 30 அன்று திருமணம் செய்து கொண்டார். மேலும், இந்த ஆண்டு ஜூன் மாதம், பிரணிதா சுபாஷ் மற்றும் அவரது கணவர் நிதின் ராஜு ஆகியோர் தங்கள் முதல் பெண் குழந்தையை வரவேற்றனர்.

Pranitha Subhashs Family Photo

Pranitha Subhashs Family Photo [Image Source: Google]

நித்தினின் 34வது பிறந்தநாளில் பிரணிதா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். மேலும், கர்ப்பமான புகைபடங்களையும் இணையத்தில் பகிர்ந்து கொண்டனர். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது என்று பிரணிதா தனது குழந்தை பிறந்தவுடன், தனது கர்ப்பத்தைப் பற்றி மிகவும் வெளிப்படையாகவும் கூறினார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யாவுகும் விசாகனுக்கும், 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தம்பதிகள் தங்கள் குழந்தையை வரவேற்றனர். ஆனால், சௌந்தர்யாவுக்கு ஏற்கனவே வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார், இது அவருக்கு இரண்டாவது குழந்தை.

soundarya rajnikanth 9

Continue Reading
To Top