Connect with us
sembuli jagan about sk movie

News

சினிமா வாழ்க்கையே போச்சு…25 லட்சம் ஏமாத்திட்டான்…சிவகார்த்திகேயன் படத்தால் நொந்துபோன பிரபல நடிகர்…

பிரபல இயக்குனரான கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர் செம்புலி ஜெகன். இவர், கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ராசுக்குட்டி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். 80, 90 ஆகிய காலகட்டங்களில் இவர் பல படங்களில் காமெடியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து முக்கியமான காமெடி நடிகராகவும் வளம் வந்தார்.

sembuli jagan

sembuli jagan [Image Source : File Image ]

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர் சிவகார்த்திகேயன் படத்தால் 25 லட்சம் ஏமாந்தேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” எனக்கு இயக்குனராக ஆக வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால் சில காரணங்களால் நடிப்பில் ஆர்வம் காட்டி சினிமாவில் நடிகராகவே பயணித்தேன். ஒருமுறை கதை எல்லாம் தயார் செய்து எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர்  மூலம் சிவகார்த்திகேயனிடம் பேசி படம் செய்ய முடிவு செய்துவோட்டோம்.

sivakarthikeyan and sembuli jagan

sivakarthikeyan and sembuli jagan [Image Source : File Image ]

அந்த படத்தின் ஷூட்டிங் கூட 20 நாட்கள் நடைபெற்றது. அந்த சம்பவம் சிவகார்த்திகேயன் அது இது எது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார். இந்த சமயம் தான் அவரை வைத்து ஒரு படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என யோசித்து படத்தை இயக்கினேன். என்னுடைய மனைவி தான் கூறினார் அவரை வைத்து படம் இயக்க, பிறகு மகேந்திரனிடம் பேசி சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க ஒப்புகொள்ளவைத்தோம்.

Sembuli Jagan Interview

Sembuli Jagan Interview [Image Source : File Image ]

படத்தின் டெஸ்ட் ஷூட்டிற்காக  சிவகார்த்திகேயன் ஹைதராபாத்திற்கு வர சொன்னேன் நான் வர சொன்னேன் அன்று தான் சிவகார்த்திகேயனுக்கு  நிச்சயதார்த்தமும் நடந்தது. நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு மதியமே கையில் துணிகளோடு  டெஸ்ட் ஷூட்டிற்காக வந்தார். அவரை வைத்து  ஒரு 20 நாட்கள் ஷூட் நன்றாக போய்க்கொண்டிருந்தது. பிறகு சிவகார்த்திகேயனுக்கும் படக்குழு மேற்பார்வையாளர் (Coordinator)க்கும் என்ன பிரச்சனை ஏற்பட்டது  பிறகு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை அவருடைய முகவரியை கூட  இல்லாமல் போய்விட்டார்.

Sembuli Jagan  and sivakarthikeyan sad

Sembuli Jagan and sivakarthikeyan sad [Image Source : File Image ]

இதையும் படியுங்களேன்- முடியவே முடியாது…அஜித் படத்தில் இருந்து தெறித்து ஓடிய நடிகை அசின்…காரணம் என்ன தெரியுமா.?

என்னிடம் இருந்து அந்த Coordinator  25 லட்சம் ஏமாத்திட்டான். அவன் என்னிடமிருந்து 25 லட்சம் ஏமாற்றி சென்றதால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் என்னுடைய சினிமா வாழ்க்கையை நாசமாயிடுச்சு பிறகு அதிலிருந்து வெளியே வரவே எனக்கு நாளாகிவிட்டது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு சிவகார்த்திகேயன் எதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.

Continue Reading
To Top