Connect with us
Nadhiya

News

கடைசி வர கவர்ச்சியை கண்ணுல காட்டல! இருந்தும் முன்னணி நடிகையாக இருக்கும் நதியா!

நடிகை நதியா நடிக்கவந்த ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு இளமையாகவும் அழகாகவும் இருந்தாரோ அதே அளவிற்கு இப்போதும் இருக்கிறார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில், சமீபகாலமாக ஹீரோக்களுக்கு அம்மாவாகும், அத்தை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தோனி தயாரிப்பில் வெளியான LGM படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகை நதியா நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இதுவரை கவர்ச்சியாக நடித்ததே இல்லை ஆனாலும், அவர் எப்போதுமே தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கிறார். இந்நிலையில், நடிகை நதியா பற்றி பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Nadhiya

Nadhiya [Image Source : File Image ]

நதியா குறித்து அவர் பேசியதாவது ” ஒரு காலத்தில் நதியா கம்மல், நதியா வளையல், நதியா பொட்டு என்று பெண்கள் மனதை மயக்கியவர் நடிகை நதியா.  அவர் படங்களில் பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் பிரபலமானது. ஃபாசில் இயக்கத்தில் வெளியான மலையாள படத்தின் மூலம் தான் நடிகை நதியா சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். நடிகை நதியா தன்னுடைய திறமையை காட்டி முன்னுக்கு வந்தவர். நதியா உச்சகட்ட புகழில் இருந்தபோது திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் நடிகை நதியா. இவர் எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கேரளாவுக்கு வருவார்.

Nadhiya

Nadhiya [Image Source : File Image ]

ஜெயம் ரவி வளர்ந்து வந்த காலத்திலும் நடிகை நதியா முன்னணி நடிகையாக இருந்தார். அப்போதே அவர் ஜெயம் ரவிக்கு அம்மாவாக எந்த தயக்கமும் இல்லாமல் நடித்தார். அதன்பிறகு சில படங்களில் நதியா வில்லியாகவும் நடித்திருக்கிறார். எப்போதெல்லாம் வெளிநாடைவிட்டு இங்கு வருகிறாரோ அப்போதெல்லாம் வருமானத்திற்காக ஒரு படத்தில் நடித்துவிட்டு சென்றுவிடுவார். கடைசி வரை கவர்ச்சியே காட்டாமல் முன்னணி நடிகையாக இருப்பவர் நதியா தான்” எனவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Continue Reading
To Top