News
மீண்டும் சம்பளத்தை உயர்த்திய கவின்.! ஒரு படத்திற்கு இத்தனை கோடியா..?
இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஆனது. இந்த படத்தின் மூலம் கவின் பெயரும் புகழும் பெற்றார். படத்தின் மூலம் அவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகமானது என்று கூட கூறலாம்.

Dada box office [Image Source: Twitter]
டாடா படத்துக்குப் பிறகு கவின் நடிக்கும் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது. கவனின் அடுத்த படத்தை எனை நோக்கி பாயும் தோட்டா, மாஸ்டர், ஆர்ஆர்ஆர் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் பணியாற்றிய பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Kavin’s next movie [Image Source : instagram]
சமீபத்தில், நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் சதீஷ் தனது நடிப்புத் திறமையால் ஈர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

kavin [Image Source: Twitter]
அதன்படி, அவர் அடுத்ததாக தான் நடிக்கும் படத்திற்கு 1.30 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் தனது சம்பளத்தை 1 கோடி உயர்த்தி 2.30 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.
