News
தினமும் 4 மணிக்கு எழுந்து பண்ணுவாரு… ஆர்யா அந்த சீக்ரெட்டை சொல்லிக்கொடுங்க …கெஞ்சும் நடிகை சித்தி இத்னானி…
நடிகர் ஆர்யா எப்போதும் உடற்பயிற்சிகள், சைக்கிளிங் செய்துகொண்டு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். படத்திற்கு படம் உடல் எடை எப்படி ஏற்ற வேண்டும், எப்படி குறைக்கவேண்டும் என்ற விவரத்தை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்று கூட கூறலாம். குறிப்பாக சார்பட்டா பரம்பரை படத்தில் கூட அவருடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்ததை பார்த்து பலரும் ஆச்சரியமானார்கள்.

arya workout [Image Source : File Image ]
வீட்டில் மட்டும் தான் ஆர்யா உடற்பயிற்சிகளில் ஆர்வம் காட்டுவார் என்றால் படப்பிடிப்பு சமயங்களிலும் கிடைக்கும் நேரத்தில் உடற்பயிற்சி செய்வாராம். இந்த தகவலை ஆர்யாவுக்கு ஜோடியாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்த சித்தி இத்னானி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

arya and Siddhi Idnani [Image Source : File Image ]
இது தொடர்பாக பேசிய நடிகை சித்தி இத்னானி ” ஆர்யா சார் நீங்கள் எப்படி ஒவ்வொரு படத்திற்கும் உடல் எடையை மாற்றுகிறீர்கள்..? எப்படி நீங்கள் டயட்டை பின்பற்றுகிறீர்கள்..? அந்த சீக்ரெட்டை எனக்கும் சொல்லிக்கொடுங்கள். உண்மையிலே ஆர்யா சார் ஒழுக்கமான மனிதர். காலையில் எழுந்த உடனே சைக்கிளிங் செய்ய தொடங்குகிறார்.

Siddhi Idnani about arya [Image Source : File Image ]
கிட்டத்தட்ட தினமும் 4 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுகிறார். படப்பிடிப்பு சமயத்தில் சைக்கிளிங் செய்வதற்கு வாய்ப்புகள் குறைவுதான் ஆனால் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அவர் உடற்பயிற்சி செய்கிறார். நமக்கெல்லாம் படப்பிடிப்பு முடித்துவிட்டு சோர்வாக இருந்தால் உடற்பயிற்சி செய்ய மாட்டோம். இன்னைக்கு வேண்டாம் நாளை உடற்பயிற்சி செய்வோம் என யோசிப்போம்.

Siddhi Idnani [Image Source : Twitter /@SiddhiIdnani]
ஆனால், ஆர்யா அந்த விஷயத்தில் மிகவும் கெட்டிக்காரர். தினமும் தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொள்வார். என்ன உணவு சாப்பிடவேண்டும்…எவ்வளவு அளவு சாப்பிடவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அவருடைய சீக்ரெட் எனக்கும் தெரிந்தால் நானும் அதனை பலோவ் செய்வேன்” என கூறியுள்ளார்.
