Connect with us

News

கஜினி 2 வருமா..? ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த ‘நச்’ பதில்.!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது கெளதம் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஆகஸ்ட் 16, 1947 திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வரும் கேபிடல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷனுக்காக  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்கள் சில சூர்யா, அசின் நடிப்பில் வெளியான கஜினி படத்தின் இரண்டாவது பாகம் பற்றி கேட்டனர். அதற்கு பதில் கூறிய முருகதாஸ்  “கஜினி 2 பற்றி எனக்கு எந்த யோசனையும் இல்லை, அந்த பெண் (கல்பனா) இறந்துவிட்டார், அவருக்கு ( சஞ்சய்) குறுகிய கால நினைவாற்றல் இழப்பு இருந்தது.

ARMurugadoss

ARMurugadoss

எனவே கஜினி 2 திரைப்படம் எடுக்க எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. எண்ணமும் இல்லை. நான் செய்வேன். புதிய ஒன்று. என்னிடம் இரண்டு ஸ்கிரிப்ட்கள் உள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என கூறியுள்ளார்.  இதனை பார்த்த ரசிகர்கள் சற்று உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கஜினி. இந்த படத்தில் சூர்யா, அசின், பிரதீப் ராவத், நயன்தாரா, ரியாஸ் கான், சத்யன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top