Connect with us

Videos

பொன்னியின் செல்வன் படத்தின் வேடிக்கையான கிளிம்ப்ஸ் வீடியோ.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளிவந்த இந்த வரலாற்று திரைப்படத்தின் முதல் பாகம், தமிழ்த் திரையுலகின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

Ponniyin Selvan 2 1st Single and teaser [Image Source: Twitter]

கல்கி கிருஷ்ணமூர்த்தியின காவிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த மிக்பெரிய திட்டத்தின் இரண்டாம் பாகமான பொன்னியின் செல்வன் 2-வின் வெளியீட்டிற்காக இப்போது பார்வையாளர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொன்னியின் செல்வன் -2 ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது, பொன்னியின் செல்வன் 2-ன் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

Ponniyin Selvan 2 5

Ponniyin Selvan [Image Source: Google]

அட ஆமாங்க… மார்ச் மாதம் தொடக்கத்தில் இதன் விளம்பர பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இன்று மார்ச் 1ம் தேதி என்பதால், படக்குழு ஒரு வேடிக்கையான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில்,  டீசர் அல்லது முதல் சிங்கிள் விரைவில் வெளியாக இருக்கிறது. இது குறித்த முக்கிய அப்டேட் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்களேன் – வாரிசு VS துணிவு: 50-வது நாள் கொண்டாட்டம்.! வெற்றி யாருக்கு?

 

இதற்கிடையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியானது. முதல் பாகத்தைப் போலவே, இசை வெளியீட்டின்போது டிரெய்லர் வெளியிடப்படும். அதாவது, ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் இந்த பிரமாண்ட விழா நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், அதற்கான தேதியை தயாரிப்பாளர்கள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PonniyinSelvan

Continue Reading
To Top