Connect with us
robo shankar and hanshika

Videos

ஹன்சிகா என்ன தடவவே விடல.! வருத்தப்பட்ட ரோபோ சங்கர்..கிழித்தெறியும் நெட்டிசன்கள்.!!

நடிகர் ஆதி நடிகை  ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பார்ட்னர். இந்த திரைப்படத்தை மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ளார். படத்தில் யோகி பாபு, பாலக் லால்வானி, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, டைகர் தங்கதுரை ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Partner

Partner [Image Source : File Image ]

விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைமுன்னிட்டு படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்சி நேற்று சென்னை நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த ஆதி, ஹன்ஷிகா உள்ளிட்ட  பட குழுவினருடன் நடிகர் ரோபோ சங்கரும் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் ஹன்சிகா ஒரு மெழுகு சிலை மாதிரி.

PartnerPressMeet

PartnerPressMeet Udhayanidhi Stalin [Image Source : File Image ]

படத்தில் ஒரு காட்சியில் நான் அவருடைய காலை அதாவது மூட்டிற்கு  கீழ் தடவுவது போல காட்சி இருந்தது. அந்த காட்சி வேண்டாம் என ஹன்சிகா மறுத்துவிட்டார். நான் எவ்வளவோ கெஞ்சியும் காலில் விழுந்தும் ஹீரோவை தவிர வேற யாரும் தொடக்கூடாது என்று கூறிவிட்டார் என மேடையில் சற்று ஆபாசமாக பேசி இருந்தார். இவர் பேசியவுடன் ஹன்சிகா சிரித்துக்கொண்டே இருந்தாலும் கூட சற்று அவருடைய முகத்தில் வேதனை தெரிந்தது. இவர் பேசிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

PartnerPressMeet Robo Shankar

PartnerPressMeet Robo Shankar [Image Source : File Image ]

இதையும் படியுங்களேன்- நான் இரவு 3 மணிக்கு அவுங்களுக்கு தான் கால் பண்ணுவேன்.! உண்மையை உளறிக்கொட்டிய உதயநிதி.!!

இதனையடுத்து,  நெட்டிசன்கள் பலரும் பொது மேடையில் இப்படியா பேசுவீர்கள்..?  என கேள்வி எழுப்பு வருகின்றனர். மேலும் நேற்று ரோபோ சங்கர் பேசியதை தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர் “சபை நாகரிகம் தெரியாமல் பேசும் நபர்கள் நடிப்பதற்கு லக்கி இல்லை. இந்த மாதிரி ஆட்களை மேடையில் எத்தாதீங்க’ என்று கடுமையாக குற்றம் சட்டி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top