உடல் எடையை குறைக்க சர்ஜரி செய்து கொண்ட ஹன்சிகா.? நெட்டிசன்களுக்கு நச் பதில்….
ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் அவர் தனது நீண்ட நாள் நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகா தற்போது ‘பார்ட்னர்’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். முன்பெல்லாம், ஹன்சிகாவை அமுல் பேபி என்று ரசிகர்கள் அழைப்பதுண்டு, அந்த அளவுக்கு இவர் குண்டாகவும் அழகாகவும் இருப்பார்.
ஆனால், நேற்று சர்வதேச யோகா தினத்தன்று ஹன்சிகா யோகா செய்வது போல், போஸ் கொடுத்திருந்த புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகா தனது உடல் எடையை குறைத்து இளமையாக காட்சியளிப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் ட்ரோல் செய்யும் நோக்கத்துடன் கருது தெரிவித்துள்ளார். அதாவது,இந்த நடிகைகள் ஆபரேஷன் மூலம் முழு உடலையும் மாற்றி, ஆனால் யோகா செய்ததைப் போல உடல் ரீதியாக அனைத்து மாற்றங்களையும் செய்து வருகிறார் என்ற சர்ச்சை கருத்தை முன் வைத்துள்ளார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹன்சிகா, ‘நான் இப்பொழுது இருக்கும் தோற்றத்துக்கு நிறை கடின உழைப்பு தேவைப்பட்டது, இதற்கு நிறைய யோகா பயிற்சியும் தேவைப்பட்டது. மேலும். இதில் நகைச்சுவை என்னவென்றால் யோகா நேர்மறை எண்ணத்தை பரப்புவதோடு வெறுப்பை குறைக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
