Connect with us

Celebrities

சாதாரணமாக எடுக்க கூடாது…”மீ டூ” குறித்து நடிகை சாய்பல்லவி கருத்து.!

 நடிகை பல்லவி கடைசியாக தமிழ்த் திரைப்படமான கார்கியில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து  சமீபத்தில் ஸ்மிதாவுடன் நிஜம் என்ற புகழ்பெற்ற தெலுங்கு அரட்டை நிகழ்ச்சியில் மீ டூ  பற்றி பேசினார்.  அது குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

sai pallavi

sai pallavi [Image Source: Twitter]

 இது குறித்து பேசிய சாய் பல்லவி “பெண்களுக்கு உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மட்டுமில்லாமல் வாய்மொழி சித்திரவதை மற்றும் தொந்தரவு கொடுப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவே கூடாது.  சிலர் பெண்களை வாய்மொழியாக திட்டுகிறார்கள். அப்படி திட்டுவதால் அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் துஷ்பிரயோகம் ஆகும். எனவே, அதுவும் மீ டூ வில் தான் வரும்.  என்று கூறியுள்ளார்.

SaiPallavi

SaiPallavi [Image Source: Twitter]

மேலும் சாய் பல்லவி மருத்துவ மாணவியாக இருந்து புகழ்பெற்ற திரைப்பட நட்சத்திரமாக மாறிய தனது பயணத்தைப் பற்றியும் திறந்து வைத்தார். வழியில் தனது வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பதைப் பற்றி விவாதித்தார்.

இதையும் படியுங்களேன்- லியோ திரைப்படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்.! யார் தெரியுமா..?

sai pallavi

sai pallavi Image Source: Twitter]

தொழில்துறையில் வெற்றிகரமான பெண்ணாக இருப்பதன் சவால்கள் மற்றும் மகிழ்ச்சிகள் குறித்தும் அவர் பேசினார். மேலும், சாய் பல்லவி தற்போது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் படத்தில் ஃபஹத் பாசிலுக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top