Connect with us

News

பகாசூரன் படத்தை பார்த்தாரா நடிகர் அஜித்..? பரபரப்பை கிளப்பும் போஸ்டர்.!

கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பகாசூரன்’. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த மக்கள் பலரும் கலவையான விமர்சனத்தையே கூறி வருகிறார்கள்.

Bakasuran 12 day

Bakasuran 12 day [Image Source: Twitter]

12 நாட்களை கடந்தும் படம் தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சிவகாசி மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் ” பகாசூரன்  போஸ்டருடன், அஜித் மோகன் ஜி இருக்கும் புகைப்படம் இடம்பெற ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்றும் அஜித்தை கவர்ந்த பகாசூரன் திரைப்படம் மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தையும் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டிய படம்.

2 week

2 week [Image Source: Twitter]

எனவும், இந்திய சினிமாவின் மிக முக்கியமான படம் இது என அஜித் பாராட்டியதாகவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பக்கம் இது வதந்தி தகவல் என்றும், மற்றோரு பக்கம் இது உண்மை எனவும் பேசப்பட்டடு வருகிறது.

Mohan G

Mohan [Image Source: Twitter]

மேலும் ஏற்கனவே, இதற்கு முன்பு மோகன் ஜி இயக்கிய திரௌபதி படம் வெளியாகும் போது அதனுடைய ட்ரைலரை பார்த்துவிட்டு அஜித் பாராட்டியாக தகவல்கள் பரவியது. அதற்கு இது வதந்தி என மோகன் ஜி  விளக்கம் கொடுத்திருந்தார். அதைப்போல, இப்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கும் விளக்கம் கொடுப்பார் என தெரிகிறது.

Continue Reading
To Top