News
அவரு ரெடி தான்…நான் தான் ரெடி இல்லை…விஜய் படம் குறித்து மனம் திறந்த வெற்றிமாறன்…
கோலிவுட் சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் விஜய் கூட்டணியில் ஒரு படமாவது வருமா என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதுவரை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வசூலை ஈட்டி, விமர்சன ரீதியாகவும் அனைத்து படங்களும் பேசும் வகையில் , அமைந்துவிடும்.

vijay and VetriMaaran [Image Source : Twitter /@CinemaWithAB]
எனவே, அவர் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் டாப் நடிகரான விஜய் வைத்து ஒரு திரைப்படமாவது இயக்கினால் அந்த திரைப்படம் கண்டிப்பாக உலக அளவில் பேசப்படும் என கோலிவுட் சினிமாவை மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். மேலும், வெற்றிமாறன் விஜயிடம் ஒரு கதையை கூறி அந்த கதையும் அவருக்கு பிடித்து போக இந்த படம் நாம் பண்ணலாம் என கூறியதாக வெற்றிமாறன் பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தார்.

vijay and vetrimaaran [Image Source : File Image ]
ஆனால் விஜய் தயாராக இருந்தாலும் வெற்றிமாறன் தொடர்ந்து படங்களை இயக்கி வருவதால் அவருடைய கால்ஷீட் தான் சிறிது பிரச்சினையாக இருக்கிறதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் விஜயுடன் இணைந்து எப்போது படம் செய்வீர்கள் என்று கேள்வி கேட்டனர்.

vetrimaaran and vijay [Image Source : File Image ]
அந்த கேள்விக்கு பதில் அளித்த வெற்றிமாறன் “விஜய்யுடன் இணைந்து படம் செய்வது குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். அவரும் தயாராக இருக்கிறார். நான் தான் இப்போது தயாராக இல்லை. நான் தற்போதுள்ள படங்களை முடித்த பிறகு, விஜய்யுடன் பேசுவேன், அந்த நேரத்தில் நான் சொல்லும் கதைகள் அவருக்கு பிடித்திருந்தால் அவருடன் இணைவேன்” என இயக்குநர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.

vetrimaaran [Image Source : File Image ]
இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் எது எப்படியோ சீக்கிரம் இருவரும் இணைந்து படம் பண்ணுங்க…என கூறி வருகிறார்கள். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது வாடிவாசல் படத்திற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். விஜய் தற்போது லேயோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
