News
ரட்சிதாவுக்கும் எனக்கும் பிரச்சனை வர காரணமே அவர் தான்…குண்டை தூக்கிப்போட்ட தினேஷ்…
சீரியல் நடிகை ரட்சிதா தினேஷ் என்பவர் காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில், பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்த ரட்சிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய கணவர் தினேஷ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் செய்வதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பரபரப்பான புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்திருந்தார்.

Rachitha Mahalakshmi [Image Source : File Image ]
புகார் அளித்ததை தொடர்ந்து தினேஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் இதைப் பற்றி எனக்கு கவலை இல்லை நான் நல்ல வழியில் தான் செல்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தினேஷ் ” நான் எந்த ஆபாசம் மெஸேஜையும் அவருக்கு அனுப்பவில்லை காவல் நிலையத்தில் கூட எங்களுடைய இரண்டு பேர்களின் ஃபோன்களை வாங்கி பார்த்தார்கள் இரண்டு பேரும் மொபைல்களிலும் அப்படி ஒரு மெசேஜ் இல்லை.

dinesh rachitha [Image Source : File Image ]
நான் அப்படி தவறாக மெசேஜ் செய்பவனாக இருந்தால் அவர்களுடைய பெற்றோர்கள் எப்படி எங்களிடம் பேசுவார்கள்..?. நான் ரட்சித்தவுடன் மீண்டும் வாழ தான் ஆசைப்பட்டேன். பிரச்சனைகளை அனைதையும் முடித்து அவருடன் மீண்டும் வாழலாம் என நினைத்தேன். எங்கள் இருவர் இடையே பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணமே கட்சிதாவின் நண்பர் ஜிஜி தான். ஜிஜி ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட். அவரைப் பற்றிய ரட்சிதாவே பல இடங்களில் பேசி இருப்பார் அதனை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

dinesh [Image Source : flime beat ]
அடிக்கடி எனக்கும் ரட்சிதாவுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர் வந்து அட்வைஸ் கொடுப்பார் என அவருடைய தரப்பில் இருந்தும் எனக்கு தகவல்கள் வந்திருக்கிறது. எங்களுடைய பிரச்னையை ஊதி பெரிசாக மாற்றியதும் அவர்தான். எங்களுடைய பிரிவிற்கு அவர்தான் முக்கிய காரணம் என்று எனக்கு சிலர் சொல்கிறார்கள். சமீபத்தில் அவருடைய குடும்பத்திலும் ஒரு பிரச்சனை வந்தது அந்த பிரச்சனையை அவதூராக பரப்பியது நான் தான் எனவும் ஜிஜி என்மீது குற்றம் சாட்டினார். இனிமேல் நானும் ரட்சிதாவும் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை” எனவும் கூறியுள்ளார்.
